சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தில் இணைந்த ‘ரெளடிபேபி’
சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்பம் ‘சூரரை போற்று’ இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை பாடகி ‘தீ’ (Dhee ) பாடியுள்ளார். இவர் ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரெளடி பேபி’ மற்றும் ‘இறுதிச்சுற்று’ படத்தில் இடம்பெற்ற ‘ஏ சண்டக்காரா…. ஆகிய பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தகவலை ‘சூரரை போற்று’ படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
The stunning voice behind #rowdybaby #sandakkara the lovely #Dhee sings for #Suriya38 #GV70 … recorded overseas with this superb talent … a quirky fun trk onway … pic.twitter.com/UBH8UqoHP9
— G.V.Prakash Kumar (@gvprakash) April 23, 2019