சூர்யா நடித்த படத்திலேயே இந்த படம் வித்தியாசமானது. ஏன் தெரியுமா?

சூர்யா நடித்த படத்திலேயே இந்த படம் வித்தியாசமானது. ஏன் தெரியுமா?

சூர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான திரைப்படங்கள் அனைத்துமே 40 முதல் 50 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சூர்யா நடித்து முடித்திருக்கும் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் பட்ஜட் சூர்யாவின் சம்பளத்தை தவிர்த்து வெறும் 15 கோடி என்றும் அவரது சம்பளத்தை சேர்த்தால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 35 கோடி என்றும் கூறப்படுகிறது

இயக்குனர் சுதா கொங்கராவின் சரியான திட்டமிடல் மற்றும் தேவையில்லாத செலவுகளை தவிர்த்தல் ஆகியவை இவ்வாறு குறைந்த பட்ஜெட்டில் படம் முழுக்க காரணம் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தை சூர்யாவே தயாரித்துள்ளதால் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே சுமார் 40 கோடி ரூபாய் லாபம் தர வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் சூர்யாவின் தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply