தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வத்தல் – 5 டீஸ்பூன்
வெங்காயம் – 3 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 1 (நறுக்கியது)
சாம்பார் தூள் – 3 டீஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும். பின்பு அதில் சுண்டைக்காய் வத்தல், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது ஓரளவு கெட்டியாக, எண்ணெய் பிரியும் நிலையில் வரும் போது, அதனை இறக்கினால், செட்டிநாடு சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!