செட் தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான செட் தேர்வு முடிவுகள் வெளியாகின.
மாநில பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய, மாநில அளவில் தகுதி தேர்வு (செட்) தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு, அன்னை தெரசா பல்கலை சார்பில், கடந்த மார்ச் 4-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடந்தது. மொத்தம் 58 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 42 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆனதால் தேர்வெழுதியவர்கள் கல்லூரிகளில் பணிக்கு சேர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் இந்தாண்டுக்கான செட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1:15 மணியளவில் இணையதளத்தில் வெளியாகின. தேர்வு எழுதியவர்கள் http://www.tnsetexam2018mtwu.inஎன்ற இணையதளம் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.