சென்டாக் சேர்க்கை தர வரிசைப் பட்டியல் வெளியீடு

சென்டாக் சேர்க்கை தர வரிசைப் பட்டியல் வெளியீடு

educationபுதுச்சேரியில் மருத்துவ, பொறியியல், பாடப்பிரிவுகளுக்கான சென்டாக் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை முதல்வர் வி.நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்டனர்.
உயிரியல் பாடப்பிரிவுகள் (எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட), பி.டெக்., பி.பார்ம், பி.ஏ. எல்எல்பி போன்றவற்றுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான தரவரிசைப் பட்டியலை திங்கள்கிழமை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் வெளியிட்டனர்.
அப்போது முதல்வர் நாராயணசாமி கூறியது:
சென்டாக் மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் ஆன்லைன் மூலம் 11,176 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 10,080 அசல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 6,827.
இதில் உயிரியல் பாடப்பிரிவுகளுக்காக (எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட) பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,502. இதில் தகுதியானவை 4,391. நிராகரிக்கப்பட்டவை 118.
பி.டெக் பாடப்பிரிவுகள்: இந்தப் பிரிவில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 4,697. தகுதியானவை 4612, நிராகரிக்கப்பட்டவை 85. பி.பார்ம் பாடப் பிரிவில் மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 2,101. தகுதியானவை 2,062, நிராகரிக்கப்பட்டவை 37.
பி.ஏ. எல்எல்பி பாடப் பிரிவுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 287, தகுதியானவை 257, நிராகரிக்கப்பட்டவை 30 என்றார் முதல்வர் நாராயணசாமி.
முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள்
உயிரியல் பாடப்பிரிவுகள் (எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட): சினேகா பிரகாஷ் (மாஹே), கே.கோபிகா (பள்ளூர்-மாஹே), ஐஸ்வர்யா எம்.பிரசாத் (மாஹே).
பி.டெக் பொறியியல் பாடப்பிரிவு: சி.ராகேஷ் (சாரம்,புதுச்சேரி), கே.கோபிகா (பள்ளூர்-மாஹே), எஸ்.பிரவீன்ராஜ் (புதுச்சேரி).
பி. பார்ம் பாடப்பிரிவு: கேடி.தீர்த்தா (மாஹே), ஆர்.நந்தினி (ஏனாம்), விஎம்.வைஷ்ணவ் (மாஹே).
பி.ஏ. எல்எல்பி (5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு): ஆர்.கீர்த்தனா (திலாஸ்பேட்டை, புதுச்சேரி), எஸ்.சம்யுக்தா (புதுச்சேரி), தேவிகா பிரேமானந்த் (மாஹே).

Leave a Reply