சென்டாக்: வெளி மாநிலத்தவருக்கு 16-இல் கலந்தாய்வு
வெளி மாநிலத்தவருக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் பி.பார்ம் பாடப் பிரிவுகளுக்கான சென்டாக் கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பொறியியல் கல்லூரி (பெக்) வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கலந்தாய்வில் பங்கேற்க 196.444 முதல் 143.000 வரை கட்ஆப் உள்ள 191 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பி.பார்ம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 195.666 முதல் 143.666 வரை கட்ஆப் உள்ள 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் நர்சிங் – 11, பிபிடி – 1, எம்எல்டி – 1, பி.பார்ம் – 8 என மொத்தம் 21 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளி மாநிலத்தவருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க 188 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடந்த மருத்துவப் பாடப் பிரிவுக்கான சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்று இடம் பெற்றவர்கள், அந்தந்தக் கல்லூரிகளில் சேரும் தேதி ஜூலை 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.