சென்னா வடை செய்வது எப்படி?

சென்னா வடை செய்வது எப்படி?

என்னென்ன தேவை

கறுப்பு கொண்டைக்கடலை – 200 கிராம்

வெங்காயாம் – 1

பச்சைமிளகாய் – 2

இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன் ( விருப்பப்பட்டால் )

கடலைமாவு (அ) மைதா – 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு ( பொரிப்பதற்கு )

எப்படிச் செய்வது

கொண்டைகடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்.மறு நாள் நீரை வடித்து மிக்ஸியில் சற்று கரகரப்பாகப் அரைத்துக் கொள்ளவும்.பின் அதனுடன் எண்ணெய் தவிர்த்து மேற் சொன்ன பொருட்களை சேர்த்து வடை மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் உள்ளங்கையில் வைத்து சிறு வடைகளாகத் தட்டி பொரித்து எடுக்கவும். எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் , ஒரு தவாவில் சிறிது எண்ணெய் சேர்த்து கட்லெட்டுகளாகப் பொரித்து எடுக்கலாம்.

Leave a Reply