சென்னையின் பல பகுதிகளில் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறையா?
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பருவமழை ஓய்வு எடுத்த நிலையில் நேற்றிரவு முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கிவிட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல். கிண்டி, மேற்கு மாம்பலம், பாடி, நுங்கம்பாக்கம், எழும்பூர், ராயபுரம், கொடுங்கையூர், வடபழனி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
மேலும் கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை இல்லை. இதுகுறித்து நேற்றிரவு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியபோது, சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து திட்டம் ஏதுமில்லை’ என்று கூறினார்.
மேலும் அடை மழை பெய்யும்பட்சத்தில் விடுமுறை பற்றி இன்று காலை அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியிருந்தார். அவரிடம் இருந்து தகவல் வெளிவருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்