சென்னையின் வறட்சிக்கு யார் காரணம்? மழை மையத்தின் இயக்குநர் தரும் அதிர்ச்சி தகவல்

சென்னையின் வறட்சிக்கு யார் காரணம்? மழை மையத்தின் இயக்குநர் தரும் அதிர்ச்சி தகவல்

சென்னையின் கடுமையான வறட்சிக்கு இயற்கை எந்தவிதத்திற்கும் பொறுப்பு இல்லை என்றும் மக்கள் தான் காரணம் என்றும் சென்னை மழை மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:”

“தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கடந்த பத்து ஆண்டு கால கட்டத்தில் நிலத்தடி நீர் அளவு அபாயகரமான அளவுக்குப் போய் விட்டது. மக்கள் மட்டும் மழை நீர் வடிகால் அமைப்புகளை சரியாக கடைப்பிடித்திருந்தால் நிச்சயம் இதைத் தடுத்திருக்க முடியும்

இந்த வறட்சிக்கு முழுக்க முழுக்க மக்களின் தவறும், அரசின் கடமை தவறிய செயலுமே காரணம். நாம் நினைத்திருந்தால் இதை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.”

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உடனடியாக தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினால் நிச்சயம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை பெய்யும்போது அதை சேமித்து வைக்கத் தவறினால் நாம் எதிர்காலத்தில் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.” என்று சேகர் ராகவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply