கனிமொழி எம்பி கேள்விக்கு சுங்கத்துறை பதில்
சென்னையில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் இருப்பதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து அவை பாதுகாப்பாக இருக்கின்றதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்
இதற்கு பதிலளித்த சுங்கத்துறை, ‘சென்னை அருகே மணலியில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும், நகரத்திலிருந்து 20 கி.மீ மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் பாதுகாப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஏலம் விடப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
740 tons of ammonium nitrate stored in Manali in Chennai, which is a highly industrialised area is raising concerns following #LebanonExplosion.
Though the customs dept is reassuring about its safety, action should be taken on a war-footing …
1/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 6, 2020