சென்னையில் எலக்ட்ரிக் ஆட்டோக்கள்: தனியார் நிறுவனம் அறிமுகம்
சென்னையில் இன்று முதல் எலக்ட்ரிக் பேருந்து சோதனை ஓட்டம் தொடங்கப்படவுள்ள நிலையில் பேட்டரியால் இயங்க கூடிய எலக்ட்ரிக் ஆட்டோக்களை, ஒரு தனியார் நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் 40 ரூபாய் செலவில், வெறும் 4 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் பண்ணினால் 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்
பெட்ரோல், டீசல், கேஸ் ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கான குறைந்த கட்டணம், தற்போது சராசரியாக 30 ரூபாயாக உள்ள நிலையில், இந்த ஆட்டோக்களில் குறைந்த கட்டணத்தை 7 ரூபாய் என நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.