சென்னையில் கடுங்குளிர் வீசுகிறது என்றும், புயல் கரையை கடந்த நிலையில் காலை முதலே குளிர்ந்த காற்று வீசி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது
சென்னையின் பிற பகுதிகளில் மழை இல்லாத நிலையிலும் கடுங்குளிர் நிலவுகிறது எனவும், மலை பிரதேசங்களில் வசிப்பது போன்று உள்ளது என்றும் சென்னை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை என்று கூறப்பட்டாலும் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பெய்த மழையினால் சூரிய ஒளியே சென்னையில் இல்லை என்பதால் குளிர் அதிகமாகியிருக்கலாம்.,