சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா?

 பரபரப்பு தகவல்

சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஆகஸ்ட் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மே 7ம் தேதி திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்ததால் சென்னையில் மட்டும் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சியிடமும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் டாஸ்மாக் திறப்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply