சென்னையில் பயங்கரம்: மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்!
சென்னை திரு.வி.க.நகரில் மனைவி மீது அவரது கணவரே ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை திரு.வி.க. நகரில் பாத்திமா என்பவர் தனது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் இன்று காலை அவர் மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த பாத்திமாவை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சென்னை அரசு மருத்துவமனையில் பாத்திமாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்,.