சென்னையில் பெண் காவலர் அருணா தூக்கில் தொங்கி தற்கொலை!

சென்னையில் பெண் காவலர் அருணா தூக்கில் தொங்கி தற்கொலை!

கடந்த சில மாதங்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் காவல்துறையில் பணிபுரிபவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அவ்வப்போது கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகின்றது

இந்த நிலையில் சென்னையில் அருணா என்ற காவலர் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவலர் அருணாவை மீட்டு நேற்று மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் காவலர் அருணா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த அருணா கடந்த சிலநாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது

Leave a Reply