சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா இந்த மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கின்றார்.
சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக தொடக்கவிழா நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று ஆர்.கே.நகரில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருவதால், வரும் திங்கட்கிழமை அதாவது ஜூன் 29ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சென்னை மக்கள் வரும் திங்கட்கிழமை முதல் முதன்முதலாக மெட்ரோ ரயில் பயணத்தில் ஈடுபடலாம். முதலில் ஒருவாரம் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்ற செய்தி வந்தது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.