சென்னையில் வயாசாட் நிறுவன ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம்

சென்னையில் வயாசாட் நிறுவன ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம்

viochatஅமெரிக்காவில் செயற்கைக் கோள் மூலமான அலைக்கற்றை சேவையை அளிக்கும் வயாசாட் நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது. 140 கோடி டாலர் வருமானம் ஈட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிறு வனத்தில் 3,800 பேர் பணிபுரிகின்றனர்.

அமெரிக்காவுக்கு வெளியே முதலாவது ஆய்வு மையம் பிரிட்டனில் செயல்படுகிறது. அதைத் தொடர்ந்து தற்போது சென்னையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளதாக நிறுவனத் தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் சத்யநாராயணசாமி தெரிவித்தார்.

1986-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் செயற்கைக் கோள் மூலம் அலைக்கற்றை சேவையை அளித்து வருகிறது. அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில பாகங்களுக்கு இந்த சேவையை நிறுவனம் அளித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 7 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

வீடுகளுக்கு சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவையை இந்நிறுவனம் அளிக்கிறது. இது தவிர்த்து சில குறிப்பிட்ட விமானங்களில் வைஃபை சேவையை அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் தொடங்கப்பட் டுள்ள மையத்தில் தற்போது 40 பொறியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் 250ஐ தொடும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த மையத்தில் கிளவுட் அடிப் படையிலான ஒருங்கிணைப்பு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்

இந்நிறுவனத்துக்கு 2-வது செயற்கைக் கோளை உருவாக்கும் பணியை போயிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வயசாட் 2 செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏரியன் ஸ்பேஸ் விண்தளத்திலிருந்து ஏவப்படும் என்று வயசாட் இன்கார்ப்பரேஷனின் மூத்த துணைத் தலைவர் கெவின் ஹர்கென்ரைடர் தெரிவித்தார்.

Leave a Reply