சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் இதுவரை 17 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று வரை சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 7 பேர்களும், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் 2 பேர்களூம் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 8 குழந்தைகள் உட்பட 17 பேர்களும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் என்பது ‘ஏடீஸ்’ எனப்படும் ஒரு வகை கொசுவினால் பரவுவதால் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், டெங்கு அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.ல்

Leave a Reply