சென்னை அண்ணா சாலையில் வெள்ளம்: முக்கிய தேர்வு ஒத்திவைப்பு
சென்னையில் இரவு முழுவதும் பலமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது! இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர்.
சென்னை மட்டுமின்றி ‘தமிழகத்தில் பரவலாக மழை’பெய்துள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழைப்பதிவுவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 10 செ.மீ. மழையும், வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது
கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது