சென்னை குப்பைத்தொட்டியில் தூத்துகுடி சந்தியாவின் உடல் பாகங்கள்! கணவரால் கொலை செய்யப்பட்டாரா?
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் கிடந்த கை,கால்களுக்கு உரியவர் யார் என அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இரண்டு வாரங்கள் நடந்த விசாரணையில் துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
மேலும் சந்தியாவை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்தது அவரது கணவர் ராமகிருஷ்ணன் என்றும்தெரியவந்துள்ளதால் அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சந்தியா தூத்துகுடியை சேர்ந்தவர் என்பதும், ராமகிருஷ்ணனுடன் திருமணமானதும் சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி சந்தியாவின் மேலும் ஒரு உடல்பாகம் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.