சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ.

சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ.

மூன்றாம் பாலினம் என்று கூறப்படும் திருநங்கை பிரித்திகா யாசினி சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பதவி ஏற்றார். அவருக்கு மற்ற காவல் அதிகாரிகள் போலவே அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு அவர் சிறப்பாக பணிபுரிய ஊக்கமளிக்கப்படும் என்று சூளைமேடு இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

காவல்துறையில் பணிபுரிய பிரித்திகா யாசினி விண்ணப்பித்தபோது அவர் திருநங்கை என்பதால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரித்திகா யாசினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் பிரித்திகா யாசினியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து எழுத்துதேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பிரித்திகா யாசினி, போலீஸ் பயிற்சிக்கு பின்னர் தற்போது சூளைமேடு காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பதவியேற்றுள்ளார். சட்டப்படி அனைத்து விவகாரங்களையும் கையாண்டு மக்களுக்கு சேவை செய்வதே தனது விருப்பம் என்று பிரித்திகா யாசினி பதவியேற்றவுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply