சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி: லட்சக்கணக்கான மாணவர்கள் தவிப்பு

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி: லட்சக்கணக்கான மாணவர்கள் தவிப்பு

madras universityசென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டு வருவதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ள போதும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் சென்னை பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதித்து வருகின்றது.

இதனால், மாணவர்கள் வேறு படிப்புகளுக்கு பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply