சென்னை வந்தது 80 டன் ஆக்சிஜன் ரயில்: அமைச்சர்கள் நேரில் வரவேற்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் உயிரிழந்து கொண்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் வந்துள்ளது. இந்த ரயிலை அமைச்சர் மா சுப்பிரமணியம், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர்

இந்த ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என்றும் இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஓரளவு தீரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனால் நோயாளிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்