சென்னை வந்தார் மு.க.அழகிரி: கருணாநிதியை நேரில் சந்தித்த பின் பேட்டி
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததே. நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள் அக்கறையுடன் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நேற்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் உறவினர்களிடம் விசாரித்தார். இதனையடுத்து இன்று காலை 5 மணிக்கு மதுரையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லம் வந்தடைந்தார்.
கருணாநிதியை நேரில் சந்தித்த மு.க.அழகிரி பின்னர் அவருடைய உடல் நல்ல முன்னேற்றத்துடன் இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.