பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்
கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் கோடிக்கணக்கான வருமானம் இன்றி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்
இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் வரை அரிசி பருப்பு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்
அதில் 5 கிலோ அரிசி பருப்பு உட்பட அத்தியாவசிய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வழி செய்யும் படியும் இந்த உதவியை செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
சோனியா காந்தியின் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பு கொடுத்து பிரதமர் மோடி இலவச உணவுக்கு ஏற்பாடு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்