செப் 13ல் நீட் தேர்வு:

கொரோனா பயத்தால் தமிழகத்தில் குறைந்த விண்ணப்பங்கள்

நாடு முழுவதும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 17 ஆயிரம் மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இந்தத் தேர்வை எழுத உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை தள்ளுபடி செய்துவிட்டது. இதுகுறித்த வழக்கிலும் நீட் தேர்வை நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

இதனையடுத்து செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும், செப்டம்பர் 1 முதல் ஆறாம் தேதி வரை ஜே.ஈ.ஈமெயின் தேர்வும் நடைபெற உள்ளது

இந்த தேர்வை தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் மட்டுமே எழுத உள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 53 ஆயிரம் பேர் மட்டுமே ஜே.ஈ.ஈ தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது நீட் மட்டும் ஜே.ஈ.ஈ தேர்வுக்காக நாடு முழுவதும் சுமார் 4000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply