செயற்கை உடல் உறுப்புகள்
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து மனித திசுக்களை செயற்கையான முறையில் உருவாக்கியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகளை புதிதாக உருவாக்க முடியும். உறுப்பு மாற்று மருத்துவத்திற்காக இனி செயற்கை உறுப்புகளை நம்புவதோ அல்லது மாற்று உறுப்புகளுக்கு காத்திருப்படைவிடவும் இந்த திசுக்களைக் கொண்டு புதிய உறுப்புகளை உருவாக்கிவிடலாம்.
ஸ்மார்ட்வாட்ச் சென்சார்
ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண்களை அளிக்கும் புதிய தொழில் நுட்பத்தை நியூயார்க்கை சேர்ந்த பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் ஏடிஎம் இயந்திரம் மற்றும் வர்த்தக நிலையங்களில் உள்ள ஸ்வைப்பிங் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம். மூன்று கட்ட சோதனைகளில் 90 சதவீதம் துல்லியமாக செயல்பட்டுள்ளது. இதர முறைகளைவிடவும் இது பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கப்படுகிறது.