செயலி புதிது: இன்ஸ்டாகிராம் பயண வழிகாட்டி
ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்துவரும் சூழலில் அதற்கு தயாராக இருக்கிறோம் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த புதிய வரி விகித முறையினால், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி விரிவடையும் என சிஐஐ நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மறைமுக வரியில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மிகப்பெரிய சீர்த்திருத்தம் இது என சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் கூறினார். மேலும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கு 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை சிஐஐ நடத்தியிருக்கிறது. இதன்மூலம் 5,000 நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பற்றிய புரிதல் கிடைத்திருக்கும். தவிர நிறுவனங்களின் சந்தேகங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் தொலைபேசி எண்களையும் சிஐஐ அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் மற்றொரு முக்கிய அமைப்பான அசோசேம், ஜிஎஸ்டி அமல்படுத்துவதைத் தள்ளி வைக்கவேண்டும் என இரு நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.