செயலி புதிது: பேசும் ஜிஃப்களை உருவாக்கும் செயலி
ஜிஃப் எனப்படும் புதுமையான அனிமேஷன் வகைப் படங்களை உருவாக்க வழி செய்யும் ஜிப்பி இணையதளம் ஜிப்பிசேஸ் எனும் காமிரா செயலியை ஐபோன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் செயலி மூலம் பயனாளிகள் ஜிப் படங்களில் வார்த்தைகளை இடம்பெற வைக்கலாம் அல்லது வீடியோ படங்களில் சப் டைட்டில்களைச் சேர்க்கலாம்.
இந்தச் செயலி மூலம் பயனாளிகள் வீடியோ கோப்பை உருவாக்கினால் போதும், அதன் ஒலி குறிப்புகளை வார்த்தைகளாக மாற்றி ஜிப்பாக உருவாக்கித் தருகிறது. வார்த்தைகளின் வடிவத்தை விருப்பம்போல் மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இந்த ஜிப் படங்களைச் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்துகொள்ளலாம். சுவாரசியமான இந்தச் செயலியின் ஆண்ட்ராய்டு வடிவம் எப்போது அறிமுகம் ஆகும் எனக் குறிப்பிடப்படவில்லை.
மேலும் தகவல்களுக்கு: goo.gl/0N5Pde