செல்பி எடுக்க தடை. உபி முதல்வரின் அதிரடி உத்தரவு

செல்பி எடுக்க தடை. உபி முதல்வரின் அதிரடி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில், முதல்வர் வசிக்கும் பகுதிகளில் செல்ஃபி எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது அந்த மாநில அரசு. இந்த அறிவிப்புக்கு, அங்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி செய்துவருகிறது. இவரது அதிரடி நடவடிக்கைகள் பல நேரங்களில் விமர்சனங்களில் சிக்கிவிடும். இந்த நிலையில்தான், வி.ஐ.பி-கள் வசிக்கும் பகுதிகளில் செல்ஃபிக்குத் தடை போட்டிருக்கிறது இவர் தலைமையிலான உ.பி அரசு.

மாநிலத்தின் முதல்வர் மற்றும் அந்த மாநில முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்கள் ‘செல்ஃபி’ எடுக்கத் தடை போடப்பட்டுள்ளது. முதல்வர் ஆதித்யநாத் வீட்டுக்குச் செல்லும் சாலையின் சந்திப்பில், இந்தத் தடை உத்தரவுகுறித்த எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டது.

இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால், அந்தப் பலகை அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த செல்ஃபி தடைகுறித்து அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘உ.பி., மக்களுக்கு முதல்வர் ஆதித்யநாத்தின் நியூ இயர் பரிசு இந்த தடை’, எனக் கிண்டல் செய்துள்ளார் அகிலேஷ் யாதவ்

Leave a Reply