செல்பி எடுக்க வந்த தொண்டரை கீழே தள்ளிவிட்ட முதலமைச்சர் : வைரலாகும் வீடியோ
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த தொண்டர் ஒருவரை கீழே தள்ளிவிடும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
இவர் ஒரு ஹரியானா சிவகுமார் என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு முதல்வர் பதவியில் உள்ளவர் இவ்வாறு நடந்திருக்க வேண்டியதில்லை என்றும் செல்பி எடுக்க வந்தவரிடம் அமைதியாக கூறியிருக்கலாம் என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் யாரை பார்த்தாலும் செல்பி எடுப்பதும் ஒருவருடைய அனுமதி இன்றி செல்பி எடுப்பதும் தவறு என்பது எப்போது நம் மக்களுக்கு புரியும் என்றே தெரியவில்லை என ஒருசிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்