செல்பி எடுத்ததால் கொலை மிரட்டலுக்கு உள்ளாகிய ஈராக் அழகி
சமீபத்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ் என்பவர் பட்டம் வென்றார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட ஈராக் நாட்டு அழகி சாரா இடான், இஸ்ரேலிய அழகியுடன் சேர்ந்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈராக் அமைப்பு ஒன்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
45 ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற முதல் ஈராக் பெண் என்ற பெருமையை கொண்ட இவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மிரட்டல் காரணமாக சாரா இடான் தனது குடும்பத்தினர்களுடன் ஈராக் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.