செல்போனில் பேசியபடியே சென்ற இளம்பெண் கிணற்றில் விழுந்த பரிதாபம்

செல்போனில் பேசியபடியே சென்ற இளம்பெண் கிணற்றில் விழுந்த பரிதாபம்

செல்போனால் பொதுமக்களுக்கு பல்வேறு பயன்கள் இருந்தாலும் அதனால் ஒருசில ஆபத்துக்களும் இருக்கின்றது என்பதும் அந்த ஆபத்தால் உயிரிழப்புகளும் நேரிடுகிறது என்பதும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சின்னபிடாரியூர் என்ற பகுதியை சேர்ந்தா சங்கீதா என்ற பெண், செல்போனில் பேசிக்கொண்டே சென்றபோது திடீரென கிணற்றில் விழுந்தார்.

இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த கதிரேசன் என்ற இளைஞரும், சுப்பிரமணி என்ற 60 வயது முதியவரும் சங்கீதாவை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளனர். ஆனால் கிணற்றில் படிகள் ஏதும் இல்லாத‌தால், மூன்று பேரும் கிணற்றில் சிக்கி மேலே வரமுடியாமல் தவித்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் வந்து, மூவரையும் மீட்டுள்ளனர். சங்கீதா கிணற்றில் குதித்த‌து ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply