செல்போனுக்காக கொலை செய்யப்பட்ட 15 வயது சிறுவன்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
கரூரில் செல்போன் திருடிய 15 வயது சிறுவனை அடித்துக் கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கரூர் அருகே சமீபத்தில் 15 வயது சிறுவன் முனியாண்டி என்பவர் செல்போன் திருடியதாக அவரை கம்பத்தில் கட்டி வைத்து ஐந்து பேர் மாறி மாறி சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்
இந்நிலையில், செல்போன் திருடியதாக 15 வயது சிறுவனை அடித்துக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கரூரில் செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கும் செயல் நெஞ்சை பதற வைக்கிறது!
இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஈவு இரக்கமின்று சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வழங்கிட வேண்டும்’.