செல்போனே இல்லாத ரஷ்ய அதிபர்: ஒரு ஆச்சரிய தகவல்

செல்போனே இல்லாத ரஷ்ய அதிபர்: ஒரு ஆச்சரிய தகவல்

இன்றைய நவீன உலகில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று இருக்கும் நிலையில் வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவின் அதிபர் புதினிடம் செல்போனே இல்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரஷிய அதிபர் புதின் அவர்களின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது:

ஒரே ஒரு தகவல் ஆதாரத்தையோ, ஊடக செய்தியையோ மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்பது அதிபர் புதினுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். நாளிதழ் செய்தி சுருக்கங்கள், டி.வி. செய்திகளின் சுருக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர் தகவல்களை பெற்றுக்கொள்கிறார். கம்ப்யூட்டரில் அதிபர் தனிப்பட்ட முறையில் இணையதளங்களை பார்த்துக்கொள்கிறார். எனக்கு தெரிந்தவரையில் அவரிடம் செல்போன் கிடையாது” என கூறியுள்ளார்.

 

Leave a Reply