செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சென்றால் செல்லக்குழந்தை நிச்சயம்
குழந்தை பேறு இல்லாத தம்பதியர் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்த பின்னர் கடைசியாக நம்புவது கடவுளைத்தான். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் குழந்தை பேறு அளிப்பதில் சக்தி வாழ்ந்த கடவுளாக திகழ்கிறார்.
குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.
திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் துவாக்குடி எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். திருச்சியில் இருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.