செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல்லா? தினகரன் விளக்கம்

செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல்லா? தினகரன் விளக்கம்

அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இந்த ஆட்சி உருவாக சசிகலாதான் காரணம் என்றும், இருப்பினும் ஆட்சி கவிழக்கூடாது என்ற எண்ணத்தில் ஈபிஎஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வருவதாக கூறினார்

இந்த கருத்தால் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் செல்லூர் ராஜூ போன்ற ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள் என்று கூறினார். ஆனால் செல்லூர் ராஜூ தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்று மறுத்தார்

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், ‘செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல் இல்லை என்றும் யார் ஸ்லீப்பர் செல் என்பது தக்க நேரத்தில் தெரியவரும்’ என்றும் கூறினார்.

Leave a Reply