சைக்கோ திரைவிமர்சனம்

சைக்கோ திரைவிமர்சனம்
தரமான த்ரில் விருந்து

சமூக வலைதளங்களில் வெளி வந்தது போல் கிட்டத்தட்ட ராமாயண கதை தான். காதலியை கடத்திய வில்லனை ஹீரோ எப்படி மீட்டெடுக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை

கண் தெரியாத மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலினுக்கு அடிக்கடி எப்எம் கேட்கும் வழக்கம் உண்டு. அந்த வகையில் எப்எம்-இல் பணிபுரியும் அதிதிராவ் ஹைத்ரியை காதலிக்கிறார். தன்னுடைய காதலை அவர் சொல்ல முயற்சிக்கும் போதெல்லாம் அவரை தடுத்து விடுகிறார் அதிதிராவ் ஹைத்ரி. பின்னர் ஒருநாள் நாளை எப்எம் கேள், அதில் நான் இருக்கும் இடத்தை குறிப்பாக சொல்வேன், அதனை கண்டுபிடித்து நீ என்னைத் தேடி வந்தால் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்கிறார். இதன்படி சரியாக இடத்தை கண்டுபிடித்து உதயநிதி ஸ்டாலின் செல்லும்போதுதான் சைக்கோ கொலைகாரன் ஒருவன் திடீரென அது அதிதிராவ் ஹைத்ரியை கடத்துகிறார். சைக்கோ கொலைகாரனிடமிருந்து மாற்றுத்திறனாளியான உதயநிதி தனது காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை

உதயநிதி ஸ்டாலின் இதுவரை இல்லாத வகையில் புதுமையான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சரியாக நடித்துள்ளார். அவர் இந்த படத்திற்காக நடிப்பதற்கு மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் தெரியவருகிறது. இதேபோன்று நல்ல கேரக்டர் அவர் தொடர்ந்து தேர்வு செய்தால் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் அதிதிராவ்வுக்கு பெஸ்ட் என்பதுபோல் அவருடைய கேரக்டர் அமைந்திருக்கிறது. குறிப்பாக சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகள், தன் காதலன் தன்னை மீட்க வருவான் என கொலைகாரனிடமே கெத்தாக கூறுவது மிக அருமை

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு அசத்தலான வில்லன் கிடைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது அவரது நடிப்பில் இருந்து தெரியவருகிறது. நித்யாமேனன், ரோகிணி, ராம் உள்பட பலர் இந்த கேரக்டரில் நடித்தாலும் அவர்களது நடிப்பு பெரிதாக எடுபடவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயமே

இந்த படத்தின் முதுகெலும்பு என்று கூறினால் அது இசைஞானி இளையராஜாதான். மிக அருமையான பின்னணி இசை இந்த படத்தை தூக்கி நிறுத்துகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் அவர் பின்னணி இசையே இல்லாமல் மௌனமாக விட்டிருப்பது அவருடைய ஸ்பெஷல் என்றே சொல்லலாம். மிஷ்கின் விறுவிறுப்பான திரைக்கதையை எழுதி இருந்தாலும் மிக அதிக வன்முறை காட்சிகளை படத்தில் வைத்திருப்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வருவது சந்தேகமே. இருப்பினும் ரசிகர்களுக்கு இந்தப்படம் சரியான த்ரி விருந்து கொடுக்கும் என்பது மிகையாகாது

ரேட்டிங்: 3/5

Leave a Reply