முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் மேல்முறையீடு தொடர்பான ஆவணங்கள் கடந்த இரண்டு நாட்களூக்கு முன்னர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் பால் நாரிமனின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 18 ஆம் தேதியன்றுதான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவண நகல்களை சுப்பிரமணிய சுவாமிக்கு, ஜெயலலிதா தரப்பினர் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.