சொந்த கட்சியின் தலைவர் பெயரே ராகுலுக்கு தெரியாது: பிரதமர் மோடி
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில், அங்குள்ள சுமர்புர் பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசிதாவது:
கடந்த 70 ஆண்டுகளாக சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை காங்கிரஸ் கட்சி உருவாக்கி இருக்கின்றது. சோனியா மற்றும் ராகுல் காந்தியின், வருமான வரி கணக்கு விபரங்களை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிக்க தொடங்கி உள்ளதால் ஜாமீனில் இருக்கும் சோனியாவும், ராகுலும் கோபத்தில் இருக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபல காங்கிரஸ் தலைவர் ‘கும்பராம்’ பெயரை ‘கும்பகர்ணன்’ என ராகுல் காந்தி பேசியுள்ளார். தன்னுடைய சொந்த கட்சியின் தலைவர் பெயரை கூட தெரியாதவர் பதவிக்கு வந்தால் ஆட்சி எப்படி இருக்கும்? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.