சொர்க்கவாசல் திறப்பு நடைபெறாத கோவில்

 சொர்க்கவாசல் திறப்பு நடைபெறாத கோவில்

 கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
சொர்க்கவாசல் திறப்பு நடைபெறாத கோவில்
தமிழகத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது கும்பகோணம். இங்கு திரும்பிய திசையெங்கும் இறைவன் வீற்றிருக்கும் திருத்தலங்களைக் காண முடியும். பொதுவாக வைணவ தலங்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு என்ற நிகழ்வு நடத்தப்படும்.

ஆனால் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. வானுயர்ந்த கோபுரத்தை கொண்டு மிளிரும் இந்த ஆலயம், 7 ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம்.

108 வைணவத் தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து மூன்றாவது திருத்தலமாகவும் விளங்குகிறது. நித்திய வைகுண்டம், பூலோக வைகுண்டம் என்று இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இந்த ஆலயமே வைகுண்டமாக கருதப்படுவதால், இங்கு தனியாக சொர்க்கவாசல் இல்லை.

Leave a Reply