சோதனை மேல் சோதனை: சுனாமி தாக்கிய இடத்தில் எரிமலை வெடித்ததால் இந்தோனேஷிய மக்கள் அதிர்ச்சி

சோதனை மேல் சோதனை: சுனாமி தாக்கிய இடத்தில் எரிமலை வெடித்ததால் இந்தோனேஷிய மக்கள் அதிர்ச்சி

இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இந்த சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1400ஐ எட்டியுள்ளது. இந்த பகுதியில் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

இந்தநிலையில் சுனாமி தாக்கிய இதே பகுதியில் உள்ள ஒரு எரிமலை இன்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது. எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர்.

எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது.
எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

Leave a Reply