சோபியா விவகாரம்: சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் டிரெண்ட்

சோபியா விவகாரம்: சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் டிரெண்ட்

சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது ‘பாசிச பாஜக ஒழிக’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடைய ஜாமீன் மனு இன்று மதியம் 12 மணிக்கு தூத்துகுடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் ஷோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தள பயனாளிகள் பலர் இதுகுறித்து கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்த விவகாரம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் சமூக வலைதளமான டுவிட்டரில், சோபியா என்று தமிழ் ஹேஸ்டேக் இந்திய அளவில் முதல் இடத்திலும், சோபியா என்ற ஆங்கில ஹேஸ்டேக் இரண்டாவது இடத்திலும், டிரெண்டாகியது. இதை தொடர்ந்து தூத்துகுடி ஏர்போர்ட் மற்றும் பா.ஜ.கவை விமர்சித்த ஹேஸ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது

Leave a Reply