ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.
தேவையான பொருட்கள் ஜோஜோபா எண்ணெய் – 2
தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் – 1
தேக்கரண்டியளவு அப்ரிகாட் கர்னல் எண்ணெய் – 2
தேக்கரண்டியளவு அவோகேடா எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு
4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம். கண் சுருக்கங்கள் ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது. தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.