சோளமாவு பணியாரம்
என்னென்ன தேவை?
சோளமாவு – 200 கிராம்
உளுந்து மாவு – 50 கிராம்
வறுத்து வேகவைத்த பாசிப் பயறு – 50 கிராம்
வெல்லம் – 150 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோளமாவு, உளுந்து மாவு, வெந்த பாசிப் பயறு ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். வெல்லத்தில் தேவையான தண்ணீர் சேர்த்து வடிகட்டி தூசி நீங்கியதும், அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு இறக்கிவைத்து ஆறியதும் ஏலக்காய்ப் பொடி, கலந்துவைத்துள்ள மாவு சேர்த்துத் தோசை மாவு பதத்தில் கலந்துவையுங்கள். மாவு இருபது நிமிடம் ஊற வேண்டும். பின்னர் பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு, இந்த மாவை ஊற்றிச் சுட்டெடுங்கள்.