சோள ரவை வெண் பொங்கல் செய்வது எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள் :
சோள ரவை – ஒரு கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
இஞ்சி – சிறிய துண்டு,
மிளகு, சீரகம் – தலா கால் தேக்கரண்டி,
நெய் – ஒரு மேஜைக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, முந்திரி – 6.
செய்முறை:
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
பாசிப் பருப்பு, சோள ரவையை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்க வேண்டும்.
குக்கரில் 3 கப் நீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ரவை, பருப்பு, உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும்.
மற்றொரு வாணலியில் நெய்விட்டு, சூடாக்கி முந்திரி, சீரகம், மிளகு, துருவிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து வெந்த சோள ரவைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.
சூப்பரான சத்தான டிபன் சோள ரவைப் பொங்கல் ரெடி.