ஜனவரி 16ல் பள்ளிக்கு வரவேண்டுமா? செங்கோட்டையன் விளக்கம்
ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக நேற்று செய்தி வெளிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் எப்படி இந்த உரையை கேட்பதற்காக திரும்பி வரமுடியும் என்று இந்த உத்தரவு குறித்து விமர்சனம் செய்யப்பட்டடு. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது
இந்த நிலையில் பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்றும், பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக் கொள்ளலாம் என்றும் சற்றுமுன் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்தே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.