ஜனவரி 28ல் திருவாரூர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் மு.கருணாநிதி, ஏ.கே.போஸ் ஆகியோர் காலமானதால் அவர்களுடைய தொகுதிகளான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 18 தொதிகுகளும் ஆக மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருவரூர் தொகுதியில் ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜனவரி 3ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும், ஜனவரி 11ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும், ஜனவரி 14ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி தேதி என்றும், ஜனவரி 28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் ஜனவரி 31ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.