ஜனாதிபதியுடன் தமிழக ஆளுனர் சந்திப்பு: அரசியலில் திருப்பம் ஏற்படுமா?
ஆட்சிக்கு எதிராக ஆளுனரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவாளர்கள் 19 பேர்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் ஒரு எம்.எல்.ஏவை தவிர மீதி 18 எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராகாததால் இன்று காலை 18 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழக அரசியலில் பெரும் சுனாமி ஏற்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை 4.30 மணியளாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் குறித்தும், சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடுவது குறித்தும் ஆளுனர் ஆலோசிப்பார் என தெரிகிறது.
குடியரசு தலைவரின் சந்திப்புக்கு பின்னர் ஆளுனர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.