ஜன.28க்குள் பணிக்கு திரும்பாவிட்டால்? பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ஜன.28க்குள் பணிக்கு திரும்பாவிட்டால்? பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் பணீயிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36 பேர், நீலகிரி மாவட்டத்தில் 10 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்விகள் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் 422 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். வரும் 28-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும். 28 ம் தேதிக்குள் பணிக்கு திரும்பி விட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை. தற்காலிகமாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் நாளையும் நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply